photo

photo
Venkatesh.A.S

Sunday 22 December 2013

Kill the Passion ! (மோகத்தைக் கொன்று விடு !)


பில்டிங் ஸ்ட்ராங்கு ! பேஸ் மெண்டு வீக்கு ! 

மேற்கண்ட தலைப்பில் வரும் காமெடி நடிகர் வடிவேலுவின் வசனத்தை நினைத்து  இந்த கட்டுரையையும் யாரும்  காமெடியாக நினைத்திட வேண்டாம்.

"மோகத்தைக் கொன்று விடு ! அல்லால் 
என்றன் மூச்சை நிறுத்தி விடு ! 
தேகத்தை சாய்த்து விடு ! அல்லால் 
அதில் சிந்தனை மாய்த்து விடு !"
- மஹாகவி பாரதியார்

மகா கவி அவர்கள் எத்தனையோ கவிதைகளை / பாடல்களை எழுதி உள்ளார்கள். அவற்றில் "மோகம் என்னும் மாயத்தீயை கொன்று போட வேண்டும்" எனும் பொருள் படும் இப்பாடல் மிகவும் ஆழமான பொருள் கொண்டது.

சிந்து பைரவி திரைப்படத்தில் வரும் இந்த பாடலின் காணொளியை காண  செல்லவும்.




இந்த மோகத்திற்கு ஆட்படாதவர் (ஏதேனும் ஒரு விதத்தில் / ஒரு வயதில்) மிகவும் குறைவாக இருப்பார். உண்மையில் இது என்னவென்று புரியாத ஒரு அவஸ்தையான நிலைமை எனலாம். தன்னையும் தன் உடலையும் மிகவும் உயர்வாக / உலகத்திலேயே ஈடினையில்லாததாக நினைத்துக்கொள்ளும் சிலர் தான் இம்மாய வலையில் விழுவார்.

மேலும் இந்த கட்டுரையை எழுத இதற்க்கான தலைப்பினை எனக்கு உணர்த்தியவரும் எனது சகோதரியுமான திருமதி ..... அவர்களுக்கு என்னுடைய முதல் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

என்னுடைய அலுவலக மூத்த மேலாளர் அவர்கள் தன்னுடைய பழக்க வழக்கங்களில் வாகனம் (அதுவும் அறுபது , எழுபதுகளில் வெளி வந்த செவிக்கினிய திரைப்பட பாடல்களை கேட்டுக்கொண்டே) ஓட்டுவதை மிகவும் விரும்புவதாக பொருள் படும் "Driving is my Passion" என்று சொன்னார்.

வாழ்க்கையில் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அதீத விருப்பு / வெறுப்பு (Passion) ஏதேனும் ஒரு விதத்தில் இருக்கலாம். உண்மையில் இந்த மோகமானது சிலருக்கு சில காலம் இருக்கும் , வேறு சிலருக்கு சற்று அதிக காலம் இருக்கும். ஆனால் ஒருபோதும் நிரந்தரமாக இருக்காது. காரணம் அதன் அமைப்பு அப்படி. அதாவது அதீத விருப்பு / வெறுப்பு என்பதில் , அதீத என்று இருப்பது "ஸ்ட்ராங்" எனப்படும் உறுதியானதின் அடித்தளம் எப்பொழுதுமே "வீக்கு" எனப்படும் பலவீனமாகவே இருக்கும். (இங்கு அதீத எனப்படும் வார்த்தை போலியானது) 



ஏனெனில் இந்த மோகமானது புத்தியை மழுங்கடிக்கும் ஒரு போதையாகும். இந்த  போதை என்று வந்தாலே தெளிதலும் இருக்கும். அந்த தெளிதலானது நிரந்தரமாக இருக்க வேண்டும். குடிகாரர்களின் வார்த்தை போல இருக்கக் கூடாது. ஆனால் எதிலுமே விடுபட வேண்டும்  சுய விருப்பம் என்று ஒன்று உறுதியாக இருந்தால் தான் நாம் உண்மையாக விடுபட முடியும்.

உண்மையில், மது குடிப்பவர்கள் மட்டும் தான் உளறுபவர்கள் அல்ல !  குடிக்காதவர்களும் உளறுவார்கள் , அதாவது அதீத மோகத்திற்கு ஆட்பட்டவர்களும் , போலியானதையே விரும்புகிறவர்களும் கண்டிப்பாக உளறுவார்கள்.

கிரகங்களில் சுபர்களான குரு (நன்னடத்தை, புத்திரப்பேறு, நிதி இவற்றிற்கு காரகரான), சுக்கிரன் (காதல் எண்ணம், நல்ல பெயர், வாழ்க்கை துணை, நிதி, அந்தரங்க உறுப்பு இவற்றிற்கு காரகரான) , புதன் (நுண்ணறிவு, தாய் மாமன், குழந்தை தனம், நரம்பு  இவற்றிற்கு காரகரான) , சந்திரன் (மனோ திடம், தாயார், உணவு, உடல் இவற்றிற்கு காரகரான) இவர்களில் ஒருவரோ / அதற்க்கு மேற்பட்டோ பலவீனம் அடையும் போது , அந்த இடத்தின் தசா / புத்தி நடைபெறும் போது அந்தந்த காரகத்திர்க்கு ஏற்றார்போல மோகம் கொள்வார்கள்.

மேலும் பாவ கிரகங்கள் சூரியன் (ஆளுமை, தகப்பனார், ஆரோக்கியம், இதயம் இவற்றிற்கு காரகரான) , செவ்வாய் (தைரியம் , உடன் பிறப்பு , ரத்தம், நிதி இவற்றிற்கு காரகரான), சனி (சோம்பேறித்தனம், அடிமைத்தனம், வியாதி, ஆயுள் , செய்யும் கர்மம் இவற்றிற்கு காரகரான) , ராகு (அகம்பாவம், கள்ளத்தனம்,  கொடிய எண்ணம், தவறான செயல்கள், தர்மத்திற்கு எதிரான வழிகள், விஷம் இவற்றிற்கு காரகரான), கேது (ஆன்மீக எண்ணம், நற்சிந்தனை, தர்மத்திற்கு எதிரான வழிகள், விஷம் இவற்றிற்கு காரகரான) இவர்களில் ஒருவரோ / அதற்க்கு மேற்பட்டோ பலம்  அடையும் போது , அந்த இடத்தின் தசா / புத்தி நடைபெறும் போது அந்தந்த காரகத்திர்க்கு ஏற்றார்போல மோகம் கொள்வார்கள்.

உதாரணமாக காதலுக்கு காரணமான சுக்கிரன் புதனின் வீடான கன்னியில் பலவீனம் (நீசம்) பெறுவார். அதாவது காதல் நுண்ணறிவிடம் தோற்று விடும். அதனால் அங்கே இருக்கும் சுக்கிரன் காதலில் பலவீன படுத்துவார். அதாவது  போலியான காதலில்!(மோகத்தில் !) அங்கே சுக்கிரனுடன் இருக்கும் கிரகம் பொறுத்து மற்ற பலன்கள் மாறுபடும். ஒருவேளை சுக்கிரனுக்கு இடம் தந்த புதன் பலம் பெற்றால் கெடுபலன்கள் குறையும். மற்ற இடங்களில் இருக்கும் வேறு சில கிரகங்களின் இடம், தன்மை , நடப்பு கோள்களின்  நிலைமை இவைகள் பொருத்தும் பலன்கள் கிடைக்கும்.

மேலும் பலம் குறைந்த செவ்வாயின் வீடான விருச்சிகத்தில், அதுவும் லக்கினமாக அமைந்து அதிலேயே  அமரும் ராகு (உச்ச நிலை) தன் வழியில் ஜாதகரை உட்படுத்தி எடுப்பார். இவர்கள் பார்ப்பதற்கு கண்ணியமாக தெரிவார் (கண்ணியமாக இருப்பது போல பிறருக்கு காண்பிப்பார்கள்) ஆனால் உண்மையில் இவர்கள் நிலைமை தலை கீழாக இருக்கும். இது தான் "Building Strong, basement weak" எனப்படும் நிலைமை.

No comments:

Post a Comment